போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!
தெமட்டகொட பகுதியில் 39 கிலோ ஐஸ் மற்றும் 5 கிலோ கேரளா கஞ்சாவுடன் நேற்று வியாழக்கிழமை (21) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
தெமட்டகொட பகுதியில் உள்ள கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.