உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மூன்று பிள்ளைகளின் தந்தை கொ*லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மாத்தறை, திக்வெலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணக் கொடுக்கல் – வாங்கல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கூரிய ஆயுதத்தால் வெட்டி நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று இது குறித்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், எல்லை மீறிச் சென்றதால் சந்தேகநபர் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் அந்த நபரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் திக்வெலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணமடைந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சாட்சியங்களின் அடிப்படையில் திக்வெலை பொலிஸார் உடனடி விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

அதற்கமைய, இந்தக் கொலையுடன் தொடர்புடைய 36 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0