மஸ்கெலியாவில் வாகனங்களுக்கு புகை பரிசோதனை.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய திடீரென வாகனங்களில் புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று 21ஆம் திகதி மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்து, வேன், பாரவூர்தி, முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்றன திடீரென சோதனை உட்படுத்தப்பட்டது.
இதன்போது பாவனைக்கு உதவாத 12 பேருந்துகள், 07 வேன்கள், 06 பாரவூர்திகள், 02 மோட்டார் சைக்கிள்கள், 02 கெப்ரக வாகனங்கள் எனபவற்றை ஒரு மாத காலத்திற்குள் திருத்தம் செய்து நுவரெலியா மாவட்ட வாகன போக்குவரத்து துறை அதிகாரி எம்,ஜீ’ சி, பண்டார அவர்களிடம் காட்ட வேண்டும் என உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

