உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக சூடான பானங்களை வழங்குமாறு  சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

நீரினால் பரவக்கூடிய நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதைக் கருத்திற்கொண்டே இந்த விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

குளிர்பானங்கள் வழங்கப்படும் தானசாலைகளில், அசுத்தமான நீரின் மூலம் பரவக்கூடிய நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் மிக அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டுச் சூடான பானங்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைத்து ஏற்பாட்டாளர்களும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சில பகுதிகளில் தற்போது பதிவாகி வரும் தொற்றுநோய்ப் பரவல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டே, பொதுமக்களின் நலன் கருதி இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0