உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் படுக்கையறையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சீதுவை, முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் பகுதியிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த பிரதேச மக்கள் இது குறித்து சீதுவை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

இதன்போது, அங்குள்ள படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பயணப்பொதி ஒன்றுக்குள் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டி என்றும், அவர் அந்த வீட்டில் நீண்டநாட்களாகத் தனியாகவே வசித்து வந்துள்ளார் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இப்படுகொலையைச் செய்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள், மிகவும் திட்டமிட்ட முறையில் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

பொலிஸாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களைக் கழற்றி அகற்றியுள்ளதுடன், வீட்டின் தொலைபேசிக் கம்பிகளையும் துண்டித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணைகளும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.

படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சீதுவை பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0