சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது
சட்ட விரோதமான முறையில் மரக் குற்றிகளை கடத்த முயன்ற நபர் ஒருவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகளை வெட்டி கடத்த முயன்றதாக அன் நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்தனர்.
அத்துடன் கப்ரக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த மரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 22.05.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்