உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்



தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தந்தக் காலச் சூழல்கள்தான் இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற அடிப்படையில் நான் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சார்ந்த இயக்கமும் கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

அதேபோன்றுதான் நாங்களும் எமது மக்களின் அபிலாஷைகளுக்காக ஆயுத வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

இரு தரப்பிற்குமே ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கிப் போராட்டங்கள் நடக்கவில்லை.

மாறாக, அன்றைய காலச் சூழல் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் மீது ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தாங்கள் தமிழர்களாக இருப்பதற்காக ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தையோ, அல்லது இலங்கையராக இருப்பதற்காகத் ‘தமிழர்’ என்ற அடையாளத்தையோ கைவிடத் தயாராக இல்லை.

அவர்கள் தமிழர்களாகவும், அதேநேரத்தில் சம உரிமையுள்ள இலங்கையர்களாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அவர்களின் உண்மையான அபிலாஷையாகும்.

நாட்டில் நிலவிய வன்முறைகள் அனைத்தும் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனது நீண்டகால அனுபவத்திலிருந்து கூறுகின்றேன், தமிழ் மக்கள் இனி ஒருபோதும் தங்களின் தரப்பிலிருந்து மற்றுமொரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்.

ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அரசியல் அனுபவங்களைக் கொண்டு அவர் இனிமேல் யுத்தம் ஒன்று நடைபெற இடமளிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது நல்ல விடயமாகும்.

இவ்வாறான அமைதியான சூழலில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் அவர் முயற்சிக்க வேண்டும்.

நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்தே இந்தத் தீர்வுக்கான ஆரம்பம் அமைய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டுள்ள இந்த அநுர அரசு, அதற்கான சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து, விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும்.” – என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0