உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம்; தம்பதியினர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (20) அத்துருகிரிய பகுதியில் வைத்து இந்த தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை, பேஸ்லைன் வீதியிலுள்ள ‘சிறிசர உயன’ பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய மனைவி மற்றும் 37 வயதுடைய கணவன் ஆவார்.

பொரளை, பேஸ்லைன் வீதி, சிறிசர உயன என்ற முகவரியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இதன் மூலம் கிடைத்த பணத்தை பெண் சந்தேகநபரின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன், பெண் சந்தேகநபர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தைப் பயன்படுத்தி அத்துருகிரிய, கொரதொட்ட, 08 ஆவது குறுகிய வீதியில் அமைந்துள்ள 06 பேர்ச் காணியையும் அதில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 300 இலட்சம் ரூபாய் பணத்திற்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி, இந்த சந்தேக நபர்களால் வாங்கப்பட்ட வீடு உள்ள நிலத்தை நேற்று (20) முதல் 7 நாட்களுக்கு செயலிழக்கச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண் சந்தேகநபர்களினதும், பெண் சந்தேகநபரின் தாயாரினதும் பெயரிலுள்ள 06 வங்கிக் கணக்குகள் தொடர்பிலும், ஆண் சந்தேகநபரின் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொகுசு கார் ஒன்று தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0