உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கபில சந்திரசேன விவகாரம்; நால்வர் பிணையில் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றத்தில் பிணை நிற்பதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர்கள் நால்வரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒரு சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

பிணைதாரர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் மற்றும் சொத்து விவர ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலப்பகுதிக்குள், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் 17 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கெசல்வத்தை பொலிஸார் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

எனினும், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வாதிடுகையில், தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாத நிலையிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேலதிக நீதிவான், சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0