பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
பலாக்காய் பறிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 68 வயதுடைய முத்துராமன் கிருஷ்ணசாமி ஆவார்.
குறித்த நபர் தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய போது தனது விவசாய தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் உள்ள பலாக்காயை பிடுங்கி வர சென்று மரத்தில் ஏறிய வேளை தவறி மரத்தின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.