பால் தேநீரின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.