நுவரெலியாவில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
அதன்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 33 அடி நிரம்ப வேண்டியுள்ளது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 2 அடி நிரம்ப வேண்டியுள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 2.06 மீற்றர் நிரம்ப வேண்டியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை விட இன்னும் 23.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது. லக்சபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 10.06 அடி நிரம்ப வேண்டியுள்ளது.
