தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!
இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28 வயதுடைய திருமணமான புஷ்பகுமார சிந்துஷன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது உடலம் பொகவந்தலாவ பிராதேசிய வைத்திய சாலையில் வைக்க பட்டு உள்ளது என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து தனது மனைவியின் இல்லத்திற்கு வருகை தந்த வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து நிறுத்தியிருந்த வேளையில் ஹேன் பிரேக் நலுவியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.