உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ்  மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நன்றியை கூறிக் கொள்வதோடு

 சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.  கச்சதீவு இலங்கையின் சொத்து முறைப்படி இலங்கை அதனை பெற்றுக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற் தொழில் மக்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறான நிலையில் தங்களுடைய  தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். 

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இடம் பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள்  இவ்வாறு பேசுவது தொடர்கதையாக இருந்த வருகிறது.

தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சதீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை  பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள் ஆயின் யாழ் மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட  யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில், தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம். 

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான  வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள். 

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம். ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி  உள்நுளையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0