உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
58 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது.

இந் நிலையில் தற்காலிக  இடமாற்றம் செய்யப்பட்டிருந்த  அதிபரை மீண்டும் தமது  பாடசாலைக்கு நியமிக்குமாறு  கோரி இன்றைய தினம் 7. 45 மணியளவில்  பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே,  அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல்” என கோசங்களை எழுப்பியிருந்தனர். போராட்டம் முடிவில்  கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு  மகஜர் ஒன்றும் தற்போதுள்ள பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் குறித்த அதிபரை மாற்றம் வேண்டும் என்று கடந்த காலத்தில் உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே குறித்த கடமை நிறைவேற்று அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

49 0 0