உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இராணுவ வெற்றியின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட இந்தச் சுதந்திர நாட்டில், யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கு எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கின்றேன். நாட்டுக்காகத் தங்கள் உயிர்களையும், உடல் பாகங்களையும் தியாகம் செய்த வீரர்களை நாம் என்றும் மறக்க முடியாது.

யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வேதனையை நான் அறிவேன். பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை நன்றாகவே புரியும்.

‘இராணுவ வீரர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் தயங்கக் கூடாது. அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு இனப்பிரிவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தீர்வுகளை மீளக்கட்டியெழுப்புதல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் மூலம் எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும்.

வருடாந்தம் ஜெனிவாவுக்குச் சென்று பேசுவதை நிறுத்தும் வகையில், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நான் யோசனை முன்வைக்கின்றேன்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிய இடத்தை வெறும் ரணவிரு சேவா அதிகார சபை ஊடாக மாத்திரம் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே, அமெரிக்காவைப் போன்று பிரத்தியேகமானதொரு திணைக்களத்தை நிறுவி, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களை விரிவான முறையில் முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

49 0 0