எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று செவ்வாய்க்கிழமை (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.