உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பெருந்தொகையான பீடி இலைகளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கற்பிட்டியின் ஆலங்குடா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது.

இதன்போது, இரண்டு சந்தேக நபர்களும், அந்தப் படகும், அத்துடன் அந்தப் படகினுள் இருபது பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேக நபர்கள், ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0