உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விசாரணைகளைக் கண்டு நாம் அஞ்சவே மாட்டோம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

“விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை. எனவே, எந்த நேரத்திலும் விசாரணைக்குச் சமூகமளிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசாரணை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு அச்சுறுத்தல் விடுத்தோ அல்லது அழுத்தங்களைப் பிரயோகித்தோ தம்மை முடக்க முடியாது என்று தெரிவித்த நாமல், இந்த விசாரணைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். பலவந்தமாக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் நீதிக்குப் புறம்பானவை என்றும் அவர் சாடினார்.

தற்போதைய அரசு நாட்டில் நடக்கும் பாரிய மோசடிகளை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“நிதி அமைச்சில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் 80 கோடி ரூபா மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மரணத்தை உடனடியாக ‘தற்கொலை’ எனக் கூறி அரசு மூடிமறைக்கப் பார்க்கின்றது. இவ்வாறான முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எம் மீதான விசாரணைகளை அரசு கையில் எடுத்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாங்கள் எதற்கும் பயந்து விசாரணைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த நாமல், தற்போதைய அரசு மக்கள் பிரச்சினைகளில் இருந்து நழுவிச் செல்லவே முயற்சிக்கின்றது எனவும், இத்தகைய போக்கினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0