உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உங்கள் காலத்தில் ஈழத்தமிழருக்கு விடிவு வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தமிழகத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக, ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அரை நூற்றாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்த உங்களின் கொள்கை உறுதி வியக்கத்தக்கது.

இலங்கை வாழ் தமிழர்களாகிய நாம், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றோம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டு நாம் போராடி வருகின்றோம்.

எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டத்துக்குத் தாங்கள் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். உங்களின் ஆட்சிக் காலத்திலேயே ஈழத் தமிழினம் ஒரு கௌரவமான அரசியல் விடுதலையைப் பெற்றிட சகல ஒத்துழைப்புகளையும் வேண்டி நிற்கின்றோம். நீங்களும் உங்கள் கட்சியும் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசை வழங்கிடப் பிரார்த்திக்கின்றோம்.” – என்று அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0