உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்கு கலைக்கழகத்தின் நிலமே எங்கள் நிலைக்களம் வீதி நாடக ஆற்றுகை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நேற்று திங்கட்கிழமை(11) சங்கு கலைக்கழகத்தின் வீதி நாடக குழுவினரால் மலையக மக்களுடைய காணி உரிமை தொடர்பான ஆற்றுகை பன்மூர் தோட்டத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது.

இந்நாடக ஆற்றுகையை சங்கு கலைக்கழகம் மற்றும் சிட்ப்ஸ் நிறுவனம் இணைந்து தங்கள் மக்களுடைய நில உரிமை பிரச்சினைகளை, எண்ணக் குமுறல்களை விழிப்புணர்வு செய்வதற்காக பல வீதி பிரச்சாரங்களையும் முன்னெடுத்தனர்.

203 வருட கால மலையக மக்களுடைய வருகையையும் வாழ்வையும் அவர்களுடைய எண்ணக் குமுறல்களையும் 30 நிமிட வீதி நாடக ஆற்றலுக்குள் ஆற்றுகை செய்தமையானது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

மேலும் எதிர்கால சந்ததியினர் அவர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர்களுடைய காணி உரிமைகள் பற்றிய தெளிவுகளையும் சிந்தனைகளையும் ஏற்படுத்த வேண்டியது இன்றைய தேவையாகவும் இருக்கின்றது. டித்வா புயலுக்கு பிறகு மலையக மக்கள் காணி உரிமை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகின்றது. அந்தவகையில் சங்கு கலைக்கழகத்தின் நாடக ஆற்றுகையானது மலையகத்தில் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டு வரும் எண்ணங்கள் எல்லோர் மத்தியிலும் விதைக்கப்பட்டதாக பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்டமையும் இங்கு ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது.

நிலத்துக்கான உரிமை எங்கே தேடுவோம் என்ற பாடல் முழு மலையகத்தின் விடுதலைக்கான அறைகூவலாக காணப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0