உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ராஜபக்ஷ அணி மீண்டும் ஆட்சியில் அமரக் கனவு காணவே வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

“ஊழல் மற்றும் மோசடிகளில் சிக்கிய ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று கனவிலும் நினைக்கக்கூடாது” என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

“இந்த நாட்டின் மக்கள் கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகவே எமக்கு மிகப்பெரிய ஆணையை வழங்கியுள்ளனர். நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற இடமளிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ அணியினர் மீள் எழுச்சி பெறப்போவதாகக் கூறி வருவதை விமர்சித்த அவர், “ஊழல், மோசடி விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான கருத்துக்களை அவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால், சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. கடந்த காலங்களில் மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற, சுத்தமான அரசியல் கலாசாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றது என்றும், பழைய ஊழல்வாதிகளை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ள சூழலில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0