உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகள் மாறாதவை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட மோசமான இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாண்ட போராளிகளையும் பொதுமக்களையும் எமது நெஞ்சில் நிறுத்தி அஞ்சலிப்போம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாவதை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக நெரூர் தமிழின அழிப்பு நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது எம்.ஏ. சுமந்திரன் பொதுச்சுடரேற்றி நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

இறுதி யுத்தத்தின் போது உணவின்றி, ஒருவேளை கஞ்சிக்காகவும் மக்கள் பட்ட துயரங்களை உலகிற்கு உணர்த்தும் வகையில், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,
“17 ஆண்டுகள் கடந்தாலும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகள் மாறாதவை. அந்த இறுதித் தருணங்களில் மக்கள் அனுபவித்த துன்பங்களை நினைவுகூரும் வாரமாக இதனை அனுஷ்டிக்கின்றோம்.

கஞ்சிக்கும் வழியில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டதை நினைவுபடுத்தவே இந்த வாரம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்.

இந்நிகழ்வில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் வீழ்ந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0