உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா; வவுனியாவில் முக்கிய ஆலோசனைக்கூட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ‘வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு’ தொடர்பான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் முக்கிய சந்திப்பு வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

இக்கூட்டத்தில் தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்துடன், மாநாட்டிற்கான தீர்மானங்கள், திட்டமிடல்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மே 14, 2026 முதல் மே 14, 2027 வரையான காலப்பகுதி ‘வட்டுக்கோட்டைப் பிரகடன பொன்விழா ஆண்டாக’ உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுதப்பட்டுள்ளது. மேலும் இப்பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளன.

அத்தோடு ஜூன் மாதம் 20ஆம் திகதி (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரம்மாண்டமான எழுச்சி மாநாடும் நடைபெறவுள்ளது.

தவத்திரு வேலன் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் அருட்தந்தையர்கள், தமழர் தாயகத்தின் 08 மாவட்டத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

69 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0