உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருள்களுடன் தொடர்புடைய 1,014 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஒருவரும், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளின் கீழ் இருவர் உட்பட 1,006 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 301 கிராம் ஹெரோயின், 701 கிராம் ஐஸ், 574 கிராம் கஞ்சா, 100 கஞ்சா செடிகள், 5 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,020 போதை மாத்திரைகள், 444 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முற்றாக முடக்கும் நோக்கில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் ஊடாக, இந்த சட்டவிரோத வியாபாரத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0