மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் வயல் நிலமொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 08 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் உன ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வெல்லாவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.