உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள்; தமிழக முதல்வர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில், மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முயற்சியிலேயே பாரிய சாதனை படைத்து முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, ஈழத் தமிழர்கள் சார்பாகத் தனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை அவர் முதற்கண் தெரிவித்துள்ளார்.

2013 தீர்மானத்தின் தொடர்ச்சி
கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர் மீது நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்றும், அதற்குச் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கஜேந்திரகுமார் எம்.பி. நினைவுகூர்ந்துள்ளார். அந்த நிலைப்பாட்டைத் தற்போதைய த.வெ.க. அரசும் உறுதியாகத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டசபையில் புதிய தீர்மானம்
“தங்களது தலைமையில் அமையும் சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே, மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம். இது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழகம் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விசாரணையும் உலகத் தமிழர்களும்
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திப் போராடி வரும் ஈழத்தமிழர்களுக்குப் பெரும் வலுச்சேர்ப்பதாக அமையும் என்றும், இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் முதலமைச்சர் விஜய் நீங்காத இடத்தைப் பிடிப்பார் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், தமிழ்த் தேசியப் பேரவை விடுத்துள்ள இந்த முதற்கட்டக் கோரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0