உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விசாரணைக்கு வரத் தயார் – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த பதில்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சர்ச்சைக்குரிய எயார்பஸ் மோசடி விசாரணைக்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட திகதியில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சென்றிருந்த போதே, ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கெடுபிடிகள் குறித்து ராஜபக்ஷ தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த நேரடிப் பதில் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமது தரப்பு நியாயங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0