உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நம்மைப் பிரிப்பதை விட இணைப்பதே அதிகம்; விஜய்க்கு சஜித் உருக்கமான செய்தி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அரசியலில் நிலவும் பிரிவினைகளைக் கடந்து ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசியுள்ளீர்கள். வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது கட்டப்படும் சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையே வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.” – என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம் மற்றும் நீதியை மட்டுமே என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளே அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலையும் ஏற்படுத்தும் என நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் கொள்கைப் பிரகடனங்கள் இலங்கையின் அரசியல் தலைமைகளையும் கவர்ந்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்த வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

67 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0