உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மீட்சிப் பணிகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் வகையில், உடனடியாக 9 பாரவூர்திகளில் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் மருந்துகள் அழிவடைந்த போதிலும், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கான எந்தவொரு சேவையும் பாதிக்கப்படாது என்று பணிப்பாளர் உறுதியளித்தார்.

மருத்துவ சேவைகளைத் தடையின்றித் தொடர்வதற்கான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து 3 பாரவூர்திகள் கொழும்பு நோக்கிப் பயணமாகி மருந்துகளை ஏற்றிவரவுள்ளன.

அதேவேளை, கொழும்பிலுள்ள மத்திய மருந்தகக் களஞ்சியத்திலிருந்து 5 பாரவூர்திகளில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அனுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து ஒரு பாரவூர்தி மூலம் அவசர மருந்து விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மொத்தம் 9 பாரவூர்திகளில் தேவையான அனைத்து வகை மருந்துகளும் எதிர்வரும் 4 நாட்களுக்குள் யாழ். போதனா வைத்தியசாலையை வந்தடையும் என்று பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தத் தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள நிதி ரீதியான இழப்பு எவ்வளவு? என்பது குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க மத்திய சுகாதார அமைச்சு மற்றும் பிராந்திய வைத்தியசாலைகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0