உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஒரு பகுதி நிதி அமெரிக்காவில் உள்ள வங்கிக்கு மாற்றம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

திறைசேரியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய மோசடிக் குழுவினர் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி நிதியை அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தில் உள்ள வங்கியின் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கணக்கானது டெலவெயர் மாநிலத்தில் உள்ள ‘ரி.டி’ வங்கியின் கிளையொன்றில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதோடு, இணைய வணிகப் பதிவுகளில் ஈடுபடும் நிறுவனமொன்றின் பெயரில் அது இயங்கி வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோசடி செய்யப்பட்ட முழுத்தொகையும் ஒரே கணக்கிற்குச் செல்லவில்லை எனவும், பல்வேறு கணக்குகளுக்குப் பணம் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பகுதி மாத்திரமே குறித்த கணக்கிற்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பணியகம் மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் மூலமே இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கான இருதரப்புக் கடன் கொடுப்பனவாக வழங்கப்படவிருந்த இந்தப் பணம், நிதி அமைச்சின் மின்னஞ்சல் கணக்குகள் ஊடுருவப்பட்டதன் விளைவாக மோசடிக்காரர்களின் கணக்குகளுக்குச் சென்றுள்ளதோடு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச நிதி பற்றிய குழு திறைசேரியின் கடன் சேவை செலுத்தும் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், பௌதீக ஆவணங்களோ அல்லது கையொப்பங்களோ இன்றி குறிப்பிட்ட அதிகாரிகளின் அதிகாரத்தின் கீழ் மாத்திரமே இவை முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0