உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குள் நடைபெற்ற இந்திர விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் தலைமையிலான சுகாதாரக் குழுவினர், விழாப் பகுதியில் இயங்கிய உணவு நிலையங்களைச் சோதனையிட்டனர்.

இதன்போது ஐஸ்கிறீம் வாகனங்கள், காரம் சுண்டல் மற்றும் பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உட்பட 12 நிலையங்களில் மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவுகளைக் கையாண்டமை, திண்மக் கழிவுகளைத் திறந்த வெளியில் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியமை, அனுமதிக்கப்பட்ட தரமான கொள்கலன்களுக்குப் பதிலாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகக் கொள்கலன்களைப் பொதியிடலுக்குப் பயன்படுத்தியமை ஆகிய சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன.

இது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸினால் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது முன்னிலையாகியிருந்த 6 வியாபாரிகள் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களுக்கு மொத்தம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. அதேவேளை, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏனைய 6 வியாபாரிகளுக்கும் நீதிவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

பொது நிகழ்வுகளின் போது சுகாதார விதிகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக இவ்வாறான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0