உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்கள், யுவதிகள் கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறியுள்ளோம். குறைந்தபட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடனான அலகு ஒன்றை தாபித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தான் இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டுச் செல்ல தீர்மானிக்கின்றார்கள். அங்கு சென்றதன் பின்னரும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

ஆடு ஜீவிதம் எனும் திரைப்படம் உள்ளது. இளைஞர், யுவதிகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு முகங்கொடுக்கும் பிரச்சினைகள் இந்த படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு வசதி படைத்தவர்களே செல்வார்கள். ஆனால் எமது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளோர் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னர் தான் தொழிலுக்காக வெளிநாடு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது அவர்களின் பெற்றோரின் அஸ்வெசும கொடுப்பனவும் இரத்துச் செய்யும் நிலை காணப்படுகின்றது.

வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும். சுற்றுலா விசாவில் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது என்ற அடிப்படை கூட ஒருசிலருக்குத் தெரியாது. அவர்களின் அறியாமையை ஒருசிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். போலி வெளிநாட்டு முகவர்கள் பற்றி அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசா காலம் முடிவடைந்த பின்னரும் பெண்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றார்கள். பல சித்திரவதைகளுக்கும் உள்ளாகுகின்றார்கள்.

இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால்தான் எமது இளைஞர், யுவதிகள் கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தவறியுள்ளோம். குறைந்தப்பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபடவில்லை. வெளிநாட்டு வருவாய் ஊடாகவே பொருளாதாரம் தற்போது பாதுகாப்பாகவுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கை இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். அவர்களின் சடலங்களை கூட நாட்டுக்கு கொண்டுவருவதில் பிரச்சினை காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைகள் பற்றி அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0