உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலஞ்சம் வாங்கிய குருநாகல் பிரதி மேயர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், 30 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, பத்தரமுல்லைப் பகுதியில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் அங்குள்ள பொது மலசலக்கூடங்களைப் பராமரிப்பதற்கான டெண்டரை வழங்குவதற்காகவே இவர் இந்த இலஞ்சத்தைக் கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டெண்டரை ஒருவருக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபா ரொக்கமாகவும், பின்னர் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதமும் பிரதி மேயரால் கோரப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே, மறைந்திருந்த இலஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக குருநாகல் மாநகர சபைக்குத் தெரிவானவர். எனினும், சபையில் ஆட்சியமைப்பதற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதையடுத்து, அவர் பிரதி மேயராகப் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதி மேயர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தூய்மையான அரசியல்” என்ற கோஷத்துடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரதி மேயர் ஒருவர், தூப்புரவுப் பணி டெண்டருக்காகவே இலஞ்சம் வாங்கி கைதாகியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0