யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து.!
இன்று சனிக்கிழமை (09) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்தது விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர் என தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் பலரும் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


