உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வியட்நாம் – இலங்கை இடையேஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் ஆகியோர் முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வியட்நாம் – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அதன்படி,

* பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்காக, வியட்நாமின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மக்கள் பொலிஸ் அகடமி மற்றும் இலங்கை தேசிய பொலிஸ் அகடமி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லுவோங் டேம் குவாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

* விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்காக, இலங்கை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வூ ஹாய் குவான் மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரினால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

* வியட்நாமின் இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, வியட்நாமிய இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் நுயென் டின் காங் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

* வியட்நாமின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கிடையிலான கலாசார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

* வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும், இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர் ஹோ அன் பொங் மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

வியட்நாம் அரசால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மெட்ரிக் தொன் உரத் தொகுதி, வியட்நாம் நிதி அமைச்சர் என்கோ வென் டுவானால் விவசாய அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2025ஆம் ஆண்டு வியட்நாமுக்கு மேற்கொண்ட அரச பயணத்தைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று வியட்நாம் ஜனாதிபதியின் இந்த அரச விஜயம் இடம்பெறுகின்றது.

வியட்நாம் ஜனாதிபதி டோ லாமுடன் அந்நாட்டு அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் குழுவொன்றும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0