உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை நடைபெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கலந்து கொண்டார்.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், காணி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், லீஸ் முறை மற்றும் அனுமதிப்பத்திர அடிப்படையில் காணி வழங்கல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயலமர்வில் வளவாளராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக காணி விழிப்புணர்வு செயலமர்வு துறையில் பணியாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், அரச அதிகாரிகள் காணி தொடர்பான சேவைகளை மக்களுக்கு திறம்படவும் இலகுவாகவும் வழங்குவதற்கான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் மேம்படுத்துவதாகும்.

அதேவேளை, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காணி சட்டங்கள், புதிய சுற்றறிக்கைகள் (Circulars), அவற்றின் வரைவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல் இந்த செயலமர்வு வழங்கியது.

செயலமர்வின் போது அரச தனியார் காணி என்றால் என்ன?, அரச காணிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?, அரச காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவை?, அரசு அதிகாரிகள் அரச காணிகளை வைத்திருக்க முடியுமா?, காணி உரிமை ஆவணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் நடைமுறைகள், குத்தகை (Lease) அடிப்படையில் காணி பெறுவதற்கான தகுதிகள், காணி அற்றவர்” என்பவர் யார்?, காணி உரிம வகைகள் மற்றும் உரிமை மாற்ற விதிமுறைகள், அரச காணி வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள், குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. பங்குபற்றுநர்களும் பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0