உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு; முல்லைத்தீவில் அஞ்சல் வாகன சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (08) அஞ்சல் வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.

புதுக்குடியிருப்பிற்கான அஞ்சல் பரிவர்த்தனைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை அஞ்சல் திணைக்கள வாகனம் மூலம் இடம்பெற்று வந்ததாகவும், அதன் பின்னர் உரிய வாகன வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் விநியோக தாமதங்களால் நேர்முகத் தேர்வு அழைப்புகள் உள்ளிட்ட முக்கிய கடிதங்கள் கூட தாமதமாக மக்களிடம் சென்றடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த மாதம் நாடாளுமன்ற அமர்விலும் இவ்விடயம் முன்வைக்கப்பட்டதாகவும், அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அஞ்சல் வாகனம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் மீண்டும் இவ்விடயம் குறித்து குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், “முல்லைத்தீவு மாவட்டம் மீண்டும் புறக்கணிக்கப்படுகின்றதா?” அஞ்சல் வாகனம் ஏன் அனுப்பப்படவில்லையென கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக அஞ்சல் வாகனம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வவுனியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட அஞ்சல் வாகனம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு ஊடாக விசுவமடு வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும், இதன் மூலம் விரைவு அஞ்சல் சேவைகளை துரிதமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இனிமேல் அஞ்சல் விநியோகத்தில் காலதாமதம் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்ட அவர், இச்சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அஞ்சல் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0