உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்; உணவகங்களில் திடீர் சோதனை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனையடுத்து பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேச மக்களுக்கும் அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கும் சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் கடந்த புதன்கிழமை (06) இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ் பாறுக் தலைமையில், இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள 24 இரவு நேர உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சுகாதார நடைமுறைகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 09 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சுகாதார சீர்கேடாகக் காணப்பட்ட பெருமளவிலான உணவுப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும், உணவகப் பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சமையலறைகளின் தூய்மை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விசேட சோதனையில் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0