உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்    ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை 7 ஆம் திகதி இடம் பெற்ற  மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்  பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க  தலைமையில், மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான இரண்டு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றன.  இக்கூட்டங்களில் அரசாங்க அதிபர், முப்படை அதிகாரிகள், துறைசார் திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் மணல் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஏழை எளிய மக்கள் மற்றும் அரசாங்க கட்டுமானப் பணிகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க  இனிவரும் காலங்களில் துறைசார் திணைக்களங்களின் அனுமதியுடன் மேலதிகமாக அரசாங்க அதிபரின் நேரடி ஒப்புதலும் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்.

மணல் அகழ்வு நடைபெறும் முக்கிய மூன்று ஆற்றுப் படுகைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும். மணல் கொண்டு செல்லும் அனுமதிப்பத்திரங்கள் (Permit) இதுவரை கைமுறையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி QR ஸ்கேன் முறை மூலம் டிஜிட்டல் முறையில் ரத்து செய்யப்படும். 

இதன் மூலம் ஒரே அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்.பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட விசேட படைப் பிரிவு ஒன்று நேரடியாக அரசாங்க அதிபருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும். 

இந்தப் பிரிவினர் மாவட்டத்திற்கு வெளியிலிருந்து நியமிக்கப்படுபவர்கள் என்பதால், தகவல் கிடைத்த 20-30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் மணல் விநியோகத்தை சீர்ப்படுத்தவும், சட்டவிரோத மணல் அகழ்வை முற்றாகக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

46 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0