உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிரதேச சபை உறுப்பினரை அவமதித்த உத்தியோகத்தர்: செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் சபையின் கௌரவ உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், கௌரவ உறுப்பினர் ஒருவரை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார். இதன்போது, “உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?” என உறுப்பினர் வினவியபோது, சபையின் செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.

மேலும், “செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை” என அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார். தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மீறல் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கௌரவ உறுப்பினர்: “பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர் கௌரவ உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற ஒழுக்கநெறி உள்ளது. சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா? அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.”

குறித்த  அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் அவர்களுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரதிகள்  கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண சபை.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.  1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி, இந்த விவகாரத்தில் முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நான் தவறு செய்திருந்தாலும்,  எனக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என பாதிக்கப்பட்ட உறுப்பினர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0