உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முடிவுக்கு வந்துவிட்டதுஅரசின் மக்கள் ஆணை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எந்த நான்கு தூண்களின் மீது கட்டியெழுப்பப்பட்டதோ, அந்த அடிப்படை எதிர்பார்ப்புகள் அனைத்தும் இன்று தகர்ந்து போயுள்ளன” என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத நவீன பொருளாதாரத் திட்டம் தங்களிடம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசிடம், தற்போது எந்தவொரு புதிய வேலைத்திட்டமும் இல்லை.

பண்புள்ள அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறிவிட்டு, தற்போது ஜனாதிபதி உட்பட 160 பேரைக் கொண்ட அரச கட்டமைப்பு ஊழல் மற்றும் ஏமாற்று வழிகளையே பின்பற்றி வருகின்றது.

அரசு பதவியேற்று ஒன்றரை வருடங்கள் நெருங்கியுள்ள போதிலும், நாட்டில் எவ்வித சமூக அல்லது பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் நன்மைகள் மக்களைச் சென்றடையவில்லை.

அரசின் மீது மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயுள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் ஆணை இப்போது காலாவதியாகி முடிவுக்கு வந்துவிட்டது.

அரசின் மக்கள் ஆணை செயலிழந்துவிட்ட போதிலும், அவர்களைத் தொடர்ந்தும் ஆதரிக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பினர் மாத்திரம் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0