உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் மே தின ஊடக அறிக்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய இன்றையதினம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தற்காலத்தில் சர்வதேசம் முகம் கொடுத்துள்ள ஏகாதிபத்யவாத இனப்படுகொலைகளை நிகழ்த்தும் போருக்கு எதிராகவும், அதனோடு கூட எமது நாட்டில் இடம்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் இந்நிகழ்வை நினைவுகூருகின்றோம்.

பட்டாம்பூச்சி  விளைவுபோன்று சர்வதேசத்தில் அரங்கேறும் இவ் அராஜக செயற்பாடானது உலகின் வறிய, வளர்முக நாடுகளை மிகவும் பாதிக்கின்றது. ஜக்கிய நாடுகள் அமைதிக்காக நிரந்தர வளர்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை திரைமறைவில் தமது ஏகாதிபத்யவாதத்திற்காக பல போர்களை செய்து அழிவை ஏற்படுத்தும் வல்லரசுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

மேலும் எமது தேசம் சார்ந்து நாட்டில் இனவாதம், மதவாதம் பேச வேண்டாம் எனக்கூறிக்கொண்டு பூர்வீக குடிகளின் இறையாண்மையை அழிக்கும் மறைமுக செயற்பாடுகளுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

ஓர் தொழிற்சங்கமாக முதலாழித்துவமற்ற ஓர் ஜனநாயகநாட்டில் தலைதூக்கியுள்ள அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் நாம் இவ்வேளை அவதானத்தை செலுத்தவேண்டியுள்ளது. நாட்டில் புரையோடிக்கிடக்கும் ஊழல், போதை போன்ற கிருமிகளை வைத்து அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளையை நசுக்கி அவர்களை சிந்திக்கவிடாது மறைமுகமான இனசுத்திகரிப்பு எமது தாயகத்தில் புரையோடிப்போயுள்ளது.

இவைகளை கண்டும்காணாது அரசு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறாக சர்வதேசத்திலும், எமது தேசத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரங்கேற்றப்படும் இனச்சுத்திகரிப்புக்கும், ஏகாதிப்பதியத்திற்கும் எதிராக இரத்தக்கறை படிந்த இன்றைய தினத்தில் குரலை உயர்த்தி எமது பலத்தை ஒருங்கிணைக்க பிரயர்த்தனம் மேற்கொள்வோமாக என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0