உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாபியாக்களுடன் டீல் வைத்தால் நான் நல்ல ஆளுநர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள்.

ஆனால், அதைவிடுத்து சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன. அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள். மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து அவர்களுக்கு வேலைகளை வழங்குமாறு கோரியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை. சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமன அனுமதிகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட முயற்சியால் பெற்றுத் தரப்பட்டன. அத்துடன், இந்தச் செயன்முறையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். அவர்களை நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது. எனினும், நேர்மையாகச் செயற்படுவர்களுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கபலமாக இருக்கும். கடந்த காலங்களில் நியமனங்கள் இலங்கை முழுவதற்குமாக வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வடக்கு மாகாணத்துக்குள்ளேயே உங்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே, நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும், என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் அவர்கள், கடந்த கால அரசாங்கங்கள் நியமனங்களை வழங்காமல் அரச இயந்திரத்தைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்தன. ஆனால், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், தகுதியானவர்களுக்கு நியமனங்களை வழங்கி அரச சேவையை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய கௌரவ பிரதி அமைச்சரும், வன்னித் தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள், ‘இந்த நியமனங்களில் எமக்கு வேண்டியவர்களை நியமிக்குமாறு எந்தவொரு கட்டத்திலும் நாம் தலையிடவில்லை. முழுச் செயன்முறையும் அதிகாரிகளால் முற்றிலும் சுயாதீனமாகவே மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களுக்காகத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 37 பேர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் 14 பேர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 44 பேர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0