மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 06 யாய பகுதியில், சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (27) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
தனது பயிர்நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் தவறுதலாக மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரே தனது பயிர்நிலத்தை பாதுகாக்க இந்த மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.