உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குகளில் முறைகேடு இல்லை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஒழுங்கற்ற முறையில் அல்லது இரட்டை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” என்று வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் திட்டவட்டமாக மறுத்தார்.

இது குறித்து பிரதி அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குகளில் இருந்து அத்தகைய முறையற்ற அல்லது இரட்டை கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதிகார சபையில் தற்போது நடைமுறையிலுள்ள கொடுப்பனவு வழங்கும் முறைகளில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய முறைமைகளே தற்போதும் பின்பற்றப்படுகின்றன.

எதிர்க்கட்சியினரால் சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமுமற்றவை. அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை மாத்திரமன்றி, அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியாகும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி விவகாரங்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்.” – என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

33 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

54 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

20 0 0