உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

TikTok காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி; முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் டிக்-டொக் (TikTok) காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயதுச் சிறுமியைப் பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தியபோது, அவர் ஏற்கனவே மற்றொரு நபரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளவாலை மாதகல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

டிக்-டொக் செயலி மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவருடன் குறித்த 15 வயதுச் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, நெல்லியடி பொலிஸாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்திய விசாரணையில்,

“சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது உண்மைதான்; ஆனால் அவருடன் தவறாக நடக்கவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், சட்ட நடைமுறைகளின்படி சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்துச் சிறுமியிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தற்போதைய காதலனுடன் செல்வதற்கு முன்பாக, தனது பகுதியைச் சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலன் ஒருவனால் தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவரது முன்னாள் காதலனையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். தற்போது 21 வயதுடைய முன்னாள் மற்றும் தற்போதைய காதலர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை யாழில் இளம் பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமயாகியுள்ளதுடன், போதை பழக்கங்களுக்கும் அடிமயாகி வரும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளை மிகவும் கவனித்தால் மட்டுமே பிள்ளைகளை சீரழிவில் இரு காப்பாற்றி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

33 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

54 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

58 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

20 0 0