உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திட்டமிட்ட ஊடக சவால்களை வெற்றிகொள்ள அரசு தயாராம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊடக சவால்களையும் விமர்சனங்களையும் முறியடிக்க முடியும் என்று விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த கால புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த,
“சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக வலைப்பின்னல்கள் எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. இவ்வாறான விமர்சனங்களை நாம் ஒரு பாரிய சவாலாகக் கருதவில்லை. அத்தகைய சவால்களை வெற்றிகொள்வதற்கு எனக்கும் இந்த அரசுக்கும் முழுமையான ஆற்றல் உண்டு.

எமக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான ஊடகப் பிரசாரங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள். அரசின் மக்கள் நலப் பணிகள் இத்தகைய தடைகளையும் தாண்டி தொடரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0