உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பெருமளவு போதைப்பொருட்களுடன் 989 பேர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய 989 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் பொலிஸாரால் 994 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 33 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டவிரோத சொத்து ஈட்டல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 312 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 731 கிராம் ஐஸ், 516 கிராம் கஞ்சா, 34 ஆயிரத்து 254 கஞ்சா செடிகள், 8 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 170 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 301 போதை மாத்திரைகள், ஒரு கிலோகிராம் 539 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 398 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக முடக்கும் நோக்கில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0