ஏணியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.!
லக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த குறித்த பெண் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.